Tamil

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது! - ஆபிரகாம் பண்டிதர்
 
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர் பாடல்கள்
 
mozhi.jpg

தமிழ்மொழி போட்டிகள்!


ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி மாதம் கொண்டாடப்பட்டது. தமிழ்மொழி மாதத்தையொட்டி நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், சொங் பாங் சமூக மன்றத்தில் நடத்தப்பட்ட தமிழ்மொழி போட்டிகளும் ஒன்றாகும். நடத்தப்பட்ட போட்டிகளில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்று, எங்கள் பள்ளிக்கு மேலும் பெறுமையைத் தேடித் தந்தனர்.

தமிழ்மொழி நடவடிக்கைகள்!

எங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வுகள் முடிந்தவுடன் தங்கள் பொன்னான நேரத்தைப் பயனுள்ள வழியில் களித்தார்கள். தமிழ் துறை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். மாணவர்கள் பூ கட்டுதல், அகல் விளக்கு/ மண்பானைக்கு வண்ணம் பூசுதல், உறி அடித்தல், இந்திய தற்காப்புக் கலை, இந்திய இசைக் கருவிகளை அறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மே 21-றாம் தேதியிலிருந்து மே 25-தாம் தேதி வரை எல்லா தொடக்கநிலையிலும் உள்ள இந்திய மாணவர்களுக்காக நடத்தப்பட்டன.