Tamil

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது! - ஆபிரகாம் பண்டிதர்
 
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர் பாடல்கள்
 
mozhi.jpg

தமிழ்மொழி விழா!

18/02/2017, சனிக்கிழமை அன்று,  எங்கள் பள்ளியைச் சேர்ந்த 17 தொடக்கநிலை ஐந்தாம் மாணவர்கள் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்திற்குக் காலையில் ஏழரை மணிக்குப் பயணமாகினார்கள். அவர்கள்  தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவிருக்கும் தமிழ்மொழி நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அங்கே சென்றார்கள். மாணவர்களுடன், தமிழ்மொழி துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் அங்கே சென்றனர். மாணவர்கள் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்துகொண்டார்கள். மேலும் மாணவர்கள் நடத்தப்பட்ட கரகாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பற்பல இருவழித் தொடர்பு நடவடிக்கைகளில் கலந்துகொண்டு பயனும் பெற்றார்கள். மாணவர்களின் மகிழ்ச்சி ததும்பும் முகங்களை கீழே உள்ள படங்களில் கண்டு களிக்கலாம்.
 

தமிழ்மொழிப் போட்டிகள்!

எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி மற்ற பல நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பது ஆசிரியர்களின் குறிக்கோள் ஆகும். அந்த வகையில் எங்கள் பள்ளி மாணவர்கள் சொங் பாங் 08.04.2017, சனிக்கிழமை அன்று  நடத்திய முத்தமிழ்  தமிழ்மொழி போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்கள்  வேடம் ஏற்று நடித்தல் போட்டி, பேச்சுத்திறன் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லும் போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்று பள்ளிக்குப் பெறுமைச் சேர்த்தனர். 


தமிழ்த்துறை நடவடிக்கைகள்!

தேர்வுக்ள முடிந்தவுடன் மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை பயனுள்ள சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு செலவழித்தனர். கலாசாரத்துடன் தொடர்பான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். தொடக்கநிலை 1/2 மாணவர்கள் தோரணம், பூ கட்டுதல் நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். தொடக்கநிலை 3/4 மாணவர்கள் அகல் விளக்குக்கு வண்ணம் தீட்டுதல், பொம்மலாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடக்கநிலை 5/6 மாணவர்கள் ஒலி வேறுபபாடு மற்றும் வில்லுப்பாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடிபட்டனர